யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சண்முகதாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடம்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
திரு இளையதம்பி சண்முகதாசன் அவர்களின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிகிரியைகள் எதிர்வரும் 24-04-2023 திங்கட்கிழமை அன்று முற்பகல் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 26-04-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
45/9 அம்மன் வீதி, கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.