Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUL 1947
இறப்பு 26 AUG 2014
அமரர் ஏகநாயகி கனகரெத்தினம் 1947 - 2014 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஏகநாயகி கனகரெத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!

காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்