யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் சிரோன்மணி 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில்
நினைவாய் நிலையாய்
என்றும் எங்களோடு எங்களின்
இறைவனாய்- என்றும் எங்களை
வழிநடத்த வணங்குகிறோம்.
31 நாட்கள் போனாலும்
முப்பதொரு நிமிடங்கள் போல் உள்ளதம்மா..!!
மறப்பதற்கு மனதிலும்
இழப்பதற்கு இதயத்திலும்
வைக்கவில்லையப்பா உயிராய்
வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள்
அழியாமல் இருக்க வேண்டும்
என்பதால் வாழ்நாள் முழுவதும்
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் உங்கள் நீங்காத நினைவுடன்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் GOLDAN HOUSE (195 Route de Saint. Leu - 93800 Epinay-Sur-Seine)எனும் மண்டபத்தில் நடைபெற இருப்பதனால் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அவரது நினைவஞ்சலி நிகழ்விலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
திருமதி ஏகாம்பரம் சிரோன்மணி அவர்களின் மறைவையிட்டு, அன்னாரின் பிள்ளைகளான மதி, மகிந்தன், மற்றையவர்களிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்....