Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 10 JUL 1940
மறைவு 02 APR 2023
அமரர் ஈஸ்வரி முத்துக்குமார்
வயது 82
அமரர் ஈஸ்வரி முத்துக்குமார் 1940 - 2023 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டவரான ஆறுமுகம் பொன்னம்மா அவர்களின் மூத்த மகளும் முருகேசு முத்துகுமார் அவர்களின் துணைவியாருமான திருமதி ஈஸ்வரி முத்துக்குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்(02-05-2023), நன்றி நவிலலும்.

எங்கள் உறவின் உயர்வே
அன்பின் பிறப்பிடமே அருள்நிறைவின் இருப்பிடமே
பாசத்திருவுருவே, பண்பதனின் பொக்கிஷமே,
அன்பு கொண்ட உங்கள் உயிர் எம்மைவிட்டுப் போனாலும்,
எம்முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்.

பாசமான உள்ளமது பரலோகம் சென்றாலும்
இனிய உங்கள் அன்புக்குரல் நிதமும் காதில் ஒலிக்கும்.
இறைவன் திருவடியில் இளைப்பாறச் சென்றுவிட்ட
உங்கள் புனிதமான ஆத்மாவை எந்நாளும்
எம் நெஞ்சிருத்தி சாந்தி பெற வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

என்றும் உங்கள் இனிய பாச நினைவுகளுடன்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உடன் பிறப்புகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்