Clicky

29ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 SEP 1930
மறைவு 24 AUG 1995
அமரர் ஏரம்பு திருநாவுக்கரசு
ஓய்வு பெற்ற அரசாங்க உத்தியோகத்தர் - கொழும்பு
வயது 64
அமரர் ஏரம்பு திருநாவுக்கரசு 1930 - 1995 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைத்தீவைப் பிறப்பிடமாகவும், மண்கும்பானை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு திருநாவுக்கரசு அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் உயிரான எங்கள் அப்பாவுக்கு…

எங்கள் வாழ்வின் வழிகாட்டியாகவும்,
பாசத்தோடும் ஒன்றாக வாழ்ந்த வேளை 1990 ஆண்டு
அரக்கர்கள் பிரித்து சென்றார்களே..,
அப்பா நாங்கள் ஒவ்வொரு நாளும்
உங்களைக் காண தினமும் அழைந்தோம்,

நாட்கள் மாதங்களானது,
மாதங்கள் வருடங்கள் ஆனபோதும்,
காத்திருந்தோம் அப்பா நீங்கள் வருவீர்கள்என்று…
அவ்வேளை தானே உங்கள் மூத்த
மகனான ராஐ்குமாரையும் பிரிந்தோம்,

உங்கள் இருவரின் பிரிவு எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.
 உங்கள் முகத்தைக் கூட பார்க்க முடியாது தவிக்கின்றோம் அப்பா…
கடைசியில் உங்கள் துயரச்செய்தி கேட்டு தவித்து நின்றோம் அப்பா…
உங்கள் இடத்தை நிரப்ப யாரும் இல்லையே அப்பா…
உங்கள் இடம் எமக்கு என்றும் …….
வெற்றிடமே…….

உங்கள் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
 

உங்கள் பிரிவால் துயருட்டிருக்கும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

நினைவஞ்சலி Tue, 27 Dec, 2022