5th Year Remembrance
Late Dr. Arumugam Sivaganesanathan
(Rosa)
MBBS, FRCS(Eng), FRCPC
Age 66
Late Dr. Arumugam Sivaganesanathan
1948 -
2014
Thellipalai, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
Share your thoughts, memories..etc
யாழ். தெல்லிப்பழை அம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், ஓமான், கனடா New Foundland, Edmonton, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த Dr. ஆறுமுகம் சிவகணேசநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவலைகள்.........
அன்புநிறை ஆதவனாகக் கண்டோம்
அனைவருக்கும் அன்புமலர் "றோசா"வானாய்
பண்பும் பகுத்தறிவும் உன் செல்வமப்பா
பலரும் விரும்பிடும் நிலைகொண்டாய்
மருத்துவம் வாழ்கைப் பணியப்பா
மனிதர்களை மதித்திடும் பெருமகனப்பா
கல்வியே வாழ்வின் மூலதனமென்பாய்
கடைசிவரை கல்விக்கு உதவிடவே விழைந்தாய்
மனையறம் காத்த மனையாளுக்கு
மருவிலா துணை நலமாய் வாழ்ந்தாய்
மலர் இரண்டு உனதானதாக மலர்ந்ததப்பா
மகத்தான அறிவுடன் வளர்த்தாயப்பா
நெஞ்சக் கூட்டில் சோகம் வழிகிறதே
நம்வாழ்வு மண்ணில் விடைபெற்றாலும்
நமக்குள் நிறைந்திருக்கும் "எங்கள் றோசா" நீ
Informed by:
Family