5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
வயது 58
அமரர் தயானந் பாலசுந்தரம்
1962 -
2021
துன்னாலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
89
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தயானந் பாலசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பா
எங்கே இன்று
தனிமையில் நாங்கள்
ஏதும் பயமின்றி பட்டாம் பூச்சியாய்
நாங்கள் இருந்தோம் உங்களுடன்
நீங்களில்லா வீடு
வெற்றிடமாய் - மனதிலும்
வண்ணமில்லை
வனப்பில்லை - உங்கள்
வாசமும் இல்லாமல்
வாழ்கின்றோம் நாங்கள்....
ஏனப்பா எங்களை தனிக்க விட்டீர்கள்..?
மின்னாமல் முழங்காமல்
எங்கே அப்பா சென்றீர்கள்...?
அழகிய கனவுகள்
உங்களோடு போயின
உங்கள் நினைவுகள் மட்டுமே
மீதியாய் இன்று
மீளமுடியாத துயருள் நாங்கள்
உங்கள் நல்வழிகாட்டல் இல்லையெனில்
இன்றும் நாங்கள் எப்படி பயணித்திருப்போம்...?
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் தயாவை கடைசிப் பயணத்தில்கூட பார்க்க முடியாமல் போன பாவகள் நாங்கள். அமைதியாக உறங்கு தயா - இது விக்கி அண்ணா குடும்பம்.