

யாழ். காரைநகர் களபூமி கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடை பள்ளஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சிவக்கொழுந்து அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகிருஸ்ணன்(லண்டன்), காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் மகேந்திரன், தவமலர்(ஜேர்மனி), கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகேஸ்வரி(லண்டன்), சந்திராதேவி(லண்டன்), பாலரூபன்(ஜேர்மனி), பத்மலோஜினி, இராசமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பரஞ்சோதி, புஸ்பநாதன் மற்றும் தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிவேதா, சந்தோஷ், கயாணன், குமுதினி, செந்தூரன், மதுஷாலினி, கிருஷ்நாத், கிருஷாந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்கொழுப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்