Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 AUG 1946
இறப்பு 12 FEB 2024
அமரர் தனலெட்சுமி நடராசா (ஞானம்)
வயது 77
அமரர் தனலெட்சுமி நடராசா 1946 - 2024 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலெட்சுமி நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 01-02-2025

உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்

அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்

ஓராண்டும் கடந்ததம்மா
ஒருயுகம் போல் உள்ளதம்மா
நனவுபோல் இல்லையம்மா
கனவுபோல் இருக்குதம்மா !

வாழ்ந்திடும் காலமெல்லாம் உங்கள் 
நினைவுகளை மீட்டி நாம்
ஞாலத்தில் வாழ்வோம் என்றோ
ஞான ஒளியில் கலந்தீர்கள்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos