Clicky

தோற்றம் 01 APR 1927
மறைவு 04 JAN 2026
திருமதி தனலெட்சுமி ஆறுமுகம்
வயது 98
திருமதி தனலெட்சுமி ஆறுமுகம் 1927 - 2026 கரம்பொன் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கந்தையா முகுந்தன் (பிரான்சு) 07 JAN 2026 France

இறுதி வணக்கம் ஈழத் தமிழராய் பிறந்து புவியெங்கும் விசிறியெறிப்பட்டவராய் விரவித் தொடர்கிறது எமது புலம்பெயர்வு வாழ்வு. எம்மோடு 'உலகத் தமிழர்' என அடையாளமிடும் எமது அடுத்த சந்ததியினரது வாழ்வின் தொடர்ச்சி மிக அரிய அனுபவங்களைக் கொண்டவை. இவை உள்ளது உள்ளபடியானதாய்ப் பதிவுற வேண்டும். இவை குடும்ப ஆவணங்களாகவோ சமூக ஆவணங்களாகவோ அமையலாம். இளவயதில் நானும் செந்தில்நாதனும் வேலணை மத்திய கல்லூரியில் ஒரே வகுப்புத் தோழர்களாகக் கல்வி பயின்ற பசுமையான காலங்கள் நிழலாடுகின்றன. எனது தந்தையாருடன் ஒன்றாக ஆசிரியராகப் பணியாற்றியவர் இயற்கை எய்திய செல்வம் ரீச்சர். வைத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இயற்கை எய்தினார் திருமதி தனலட்சுமி ஆறுமுகம். பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி எனும் இயங்கியல் கோட்பாட்டை மனதில் நிறுத்தி மௌன வணக்கம் செலுத்துகிறோம். - கரம்பன் மேற்கு கந்தையா மாஸ்ரர் - தனலட்சுமி பரம்பரையினர் சார்பாக கந்தையா முகுந்தன் (பிரான்ஸ்) 07.01.2026

Tributes