யாழ்ப்பாணம் மகேந்திராவைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தேவேந்திரா துரைசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-01-2022
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கின்றோம்
ஓராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
தேடிக் களைத்து விட்டோம் உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் எங்களை விட்டுப் போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Dear Chinnamma & Family. We are so very sorry for your loss. Please accept our sincere heartfelt condolences. Much love, Narendranathan Family.