
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட தேவறஞ்சிதன் புஸ்பமலர் அவர்கள் 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மருசலீன் மாகிறேட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவறஞ்சிதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாள்ஸ், றதீஸ், துசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றூபன், சனு ஆகியோரின் மாமியாரும்,
வேவி, சாந்தி, அன்ரன், குணா, ஸ்ரெலா, தங்கா, பவானி ஆகியோரின் மைத்துனியும்,
அஜி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-11-2018 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கிளிநொச்சி திரேசம்மா தேவாலத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் திருநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.