



காலையில் வந்த செய்தி கேட்டு கண்ணீரில் கரைந்து போனோம் ??ஒரே தெருவில் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் ஆறுமுகம் பெற்ற குலவிளக்கு குடும் பத்தை இதயத்தில் சுமந்தவள் !தாய்க்கு தாயாய் இருந்து குடும் பத்தை காத்த மகள் ?பொறுமையோடு இருந்து பெருமை சேர்த்தாய் இன்று உங்கள் பிரிவை எண்ணி கலங்கிறோம் அக்கா !அன்போடும் ஆசையோடும் அனைவரையும் அரவணைத்து அள்ளி அள்ளி கொடுத்து ஆனந்தம் கொண்டாய் அக்கா !எம்மை தவிக்க விட்டு எங்கே போனாய் அக்கா !??அறுசுவை சமைத்து பரிமாறி அகம் மகிழ்ந்து வருவிருந்து பார்த்து காத்து இருப்பாய் அக்கா !எம்மை கண்ணீரில் கரைய விட்டு போனாயோ.. தனக்கென வாழும் உலகில் பிறர் நலம் வேண்டி நாள் தோறும் வழிபடும் உள்ளம் !எம்மை வாட விட்டு போனது ஏனோ? துணைவன் இன்றி துயரில் வாடினீர்கள் படுக்கையில் இருந்தாலும் உம் துன்பம் மறந்து எம் துன்பம் போக்க பல ஆறுதல் சொல்வீர்கள் அக்கா !இனி யார் தான் ஆறுதல் சொல்வார்கள் ??எம் உடன் பிறவா சகோதரி போல் எம்மோடு வாழ்ந்தீர்கள் அக்கா !உம்மை இழந்து தவியாய் தவிக்கிறோம் கண் விழித்து பாரும் அக்கா !??சொக்கர் அண்ணா சொர்க வாசல் திறந்து வைக்க சொல்லாமல் சொர்க்கம் போனாயோ அக்கா !??
