Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 JAN 1957
இறப்பு 14 SEP 2015
அமரர் தர்மலிங்கம் தேவகுமார் (உதயன்)
உரிமையாளர்- Sharuka78 Sarl
வயது 58
அமரர் தர்மலிங்கம் தேவகுமார் 1957 - 2015 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கு, வவுனியா ஓமந்தை, கொழும்பு, பிரான்ஸ் Mantes la Jolie ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் தேவகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூச்சுப் போய் ஐந்தாண்டுகள் ஆனதா- ஐயா?
இல்லை உன் முத்துச் சிரிப்பு தொலைந்து போனதா?
என்னவென்று விம்புவேன் உம் இழப்பை
ஆண்டுகள் அழிந்தாலும் அழியாது உம் நினைவுகள்

ஆழ்கடல் வற்றினாலும் என்
அன்புக் கடல் வற்றாத என்
அன்புத் தெய்வமே
நீ இல்லாத உலகில்
என் வாழ்வே இருண்டதையா

கண்களில் எம்மைச் சுமந்த நீர்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்து விட்டீர் காற்றில்!!
இந்த மண்ணில் உம்மைப் போல் யார் வருவார்?

இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே

உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.....

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் 
 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute