திதி: 14-10-2024
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரன் கபிலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
ஆண்டு ஓன்று கடந்த பின்பும்
ஓயவில்லை நினைவலைகள்
முல்லைச் சிரிப்பும் மலர் முகமும்
அகலவில்லை எம் நினைவில்
உன் வரவை எண்ணி ஏக்கமுடன்
காத்திருக்கின்றோம் ஒரு முறை வாராயோ?
உன் திருமுகம் காட்டாயோ?
அழுத விழிகளுக்கு ஆறுதல் தாராயோ?
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!