யாழ். கரவெட்டி மலர்வாசத்தினைப் பிறப்பிடமாகவும், வதிரி புனிதத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் முருகேசு வேதாபரணம் அவர்கள் 02-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நகுலாம்புசம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவன், கௌசல்யா, கௌசிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீற்றா, பிரதாபன், சரிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேதநாயகம், வேதாரணியம் மற்றும் கற்பநாயகம், காலஞ்சென்ற விபுலானந்தன், வித்தியாதரன், அருந்தவமலர், காலஞ்சென்ற தேவநாயகம், தேவாபரணம், தேவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இருதயமலர், றஞ்சிதமலர், அமரதாசன், அனிற்றா பேர்லி, ஸ்ரலா புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஷ், அக்க்ஷை, பிரதோஷ், பிரணவி, தன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வதிரி புனிதத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனை தொடர்ந்து வதிரி பொம்பேர்ஸ் மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஆலங்கட்டை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.