

எமது அருமைத் தெய்வமே, எமது ஆன்மீக தலைவரே! சிதம்பரபிள்ளை ஐயாவே! எமது அருமை அண்ணாவே! உங்கள் பிரிவு எமது தமிழுக்கும் ,சைவத்திற்கும் ஈடுசெய்ய, முடியாத இழப்பாகும். ,##################################₹₹# 1989 இல் இலண்டனில் தமிழர்களின் உரிமைக்காக, நீங்கள் எழுப்பிய உரிமைக்குரலால் ஈர்க்கப்பட்டவர்களில் எம்மில் பலர் அடங்குவோம். தன்னலமற்ற தனிப்பெரும் வழிகாட்டியின் அபிமானியாக கடந்த 36 ஆண்டுகள்ங்களாக வாழ உங்கள் ஆசி எமக்கு கிடைத்தது பெரும் பாக்கியமாகும். மேலும் தொடர்ந்தும் பல ஆண்டுகள் உங்கள் தூய பணி எமது தமிழுக்கும் சைவத்திற்கும், எமது ஆலயங்களுக்கும் , எண்ணற்ற சமூக அமைப்புக்களுக்கும் உண்டென நம்பி இருந்தோம். உங்கள் அர்பணிப்பு மிக்க தொண்டு எம்மால் என்றுமே மறக்கமுடியாதது. உங்களால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்புக்களும் ,உங்கள் ஆதரவில் வளர்ந்த ஆலயங்கள், சேவைத் தலங்கள் எமது மண்ணிலும் தொடர்ந்து உங்கள் நினைவவுடன் பணிசெய்து வளரும் என்பதில் ஜயம் இல்லை. ==========/============================ கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் தியாக வேள்வியில் என்றும் பக்கபலமாக இருந்து அரும் தொண்டாற்றிய உங்கள் அன்புத்துணைவிக்கு எமது ஆழ்த அனுதாபத்தினையும், ஆறுதலையும் இங்ந்கு சமர்ப்பிக்கின்றோம். ####################################### எங்களை தவிக்கவிட்டு சிவன் உங்களை விரைவாக அழைத்து விட்டார் , நாம் நீங்கள் காட்டிய வழியில் பணிசெய்து உங்களைப் பின்தொடர்வோம். ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி. நன்றி, அன்புக்குரிய, பேரம்பலம் அன்பழகன் "ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அங்கத்தவர்கள்,அடியார்களின் சார்பாக இந்த நினைவஞ்சலியினை சமர்ப்பித்துள்ளோம்" நன்றி

We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.