யாழ். புலோலி தெற்கு கலையாவத்தை புற்றனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சிதம்பரப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
தெய்வத்தின் திரு உருவே! எங்கள் தனம்/ சித்தா!
ஒரு வருடம் கடந்துவிட்டது...
ஆனால் நீங்கள் எங்களை விட்டு பிரிந்த
அந்த நாளின் வலி, இன்றும் எங்கள் இதயங்களில்
பசுமையான காயமாகவே இருக்கிறது.
உங்கள் அன்பான குரலைக் கேட்கவும்,
உங்கள் முகத்தைப் பார்க்கவும்,
ஒருமுறை உங்கள் கரங்களைப் பிடிக்கவும்
எங்கள் மனம் தினமும் ஏங்குகிறது.
எங்கள் வாழ்வின் ஒவ்வொரு வெற்றியிலும்
உங்கள் உழைப்பின் தடம் இருக்கிறது.
எங்கள் ஒவ்வொரு முன்னேற்றத்திலும்
உங்கள் ஆசீர்வாதத்தின் நிழல் இருக்கிறது.
ஒவ்வொரு முறையும்,
"தனம்/ சித்தா இருந்திருந்தால்..." என்ற ஏக்கம் மட்டும்
மனதை விட்டு அகலவில்லை.
வானத்தில் ஒரு நட்சத்திரமாக நீங்கள்
ஒளிர்ந்தாலும், எங்கள் வாழ்வில் என்றும்
வழிகாட்டும் ஒளியாகவே இருக்கிறீர்கள்....
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்...
மகேஸ்வரியின் வேண்டுதலுக்கு இசைவாக தம்பி தனத்தின் ஆழ்மையை நெறிப்படுத்திய புறச்சூழல் சிலவற்றை இவ்விடம் கூறவிளையும் அக்கா.
வருடம் ஓன்று ஒடியது - தெரியவில்லை.
நெடும் நினைவுகள் கொடியது - தணியவில்லை.
அருகிலே இருக்கையில் அருமை - தெரியவில்லை.
தொலைவில் தொலைந்தபின் நெஞ்சம் - மறக்கவில்லை.
அண்ணன் மூவர், தம்பியர் மூவர்;
தம்பிகளில் நடுவர் இவர்.
தொன்மையில் புகழ் பூத்த தொப்புள் உறவு.
புலவர்களின் புலமை ஒலிக்கும் புலோலியூர்;
புலம்பெயர்ந்தவர்களின் குரலாய் லண்டனில் நிறைவு.
தந்தையார் நெறிகாட்டலில் வழக்கறிஞ்ஞர்
தாய்வழிப் பாட்டனார் சிதம்பரபிள்ளை புராண உபநியாசம்.
பேரன் சிதம்பரபிள்ளை “சைவ முன்னேற்றச் சங்கம்” உருவாக்கம்.
புற்றளைப் பிள்ளையாரின் புதுமையின் இரகசியம்:
கொள்ளுப்பாட்டன் கணபதிப்பிள்ளை
பிள்ளைபராயத்தில் பெற்ற இறை அனுபவம்,
வீட்டுத் திடல் மத்தியில் ஒரு புற்று,
விளையாடிய சிறுவர்களில் ஒருவன் இவன்.
விளைந்த அற்புதத்தில் அயர்ந்தனர் அனைவரும்.
வெடித்தது புற்று; வெளிவந்தார் வேழ விநாயகர்,
விழித்தனர் விளையாடியவர்.
வீடு சென்று
வெள்ளைகட்ட வஸ்திரம், அரிசி,சக்கரை, தேங்காய்
அத்துடன் பானை, பழம் பொறிக்கி பொங்கல் படைத்தனர்.
புற்றளை பிள்ளையாரின் புதுமையைக் கேட்டு குழுமினர் ஊரார்.
கடகடவென மடமடவெனப் பரவியது புகழ்.
வஸ்திர கூடாரம் கொட்டிலாகி, கோவிலாகி, கோபுரமும் ஆகியது.
மடப்பள்ளி, மடம், பூங்கா, கேணி, கிணறு,
குருக்கள் மடம், தேர்முட்டி, தேரோடும் வீதியென மிளிர்கின்றது.
நான் சொல்லும் இந்த வரலாற்றின் உண்மையை உணர்த்த
பொங்கல் சம்பவம் சான்று பகரும்.
புற்றில் தோன்றியபொழுது பொங்கல் செய்தவர்களின் சந்ததியினரே
இன்றுவரை கோவில் பொங்கல் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
தந்தையார் வரலாறு: ஆசிரியர்; ஆங்கிலம் கற்றவர். அதன்பின் ஆங்கிலேயர் நிர்வாகத்தில் பணிபுரிந்தவர். பிற்காலத்தில் Corporative Wholesale Establishment ல் தன் பணியை தொடர்ந்தவர். தள்ளாத வயதிலும் ஊரவர்களுக்கு வேதனமின்றி ஆங்கிலம் கற்றுக்கொடுத்தவர். அவரின் தந்தையார் கதிர்காமர். அவரின் சேவையை மெச்சிய அன்றைய ஆங்கிலேய அரசாங்கம், அவருக்கு உடையார் பட்டம் சூட்டி கௌரவித்தது. கதிர்காமரின் தந்தையார் பெயர் கந்தர். பொதுத்தொண்டில் தனையனை விஞ்சியவர். அரசாங்கம் அவருக்கு உடையார் பட்டம் உவந்தளித்தது. அப்பெருமானின் நினைவாக நிற்கின்றது “கந்த உடையார் ஒழுங்கை” என அழைக்கப்படும் அவர் வாழ்ந்த வீட்டின் வீதி. தந்தைவழிப்பாட்டன் கதிர்காமர், வித்தையில் விழுமிய கந்தர் பூட்டன். வேதனம், உயரிய பட்டம் உடையார். ஊர் பெற்றது கந்த உடையார் ஒழுங்கை, உவந்தளித்தது ஆங்கிலேய அரசாங்கம்.
தாய், தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை என்பதற்கிணங்க, தன் தாயை இறுதி வரை இதயத்தில் சுமந்து வாழ்ந்தவர். பரம்பரை வீட்டின் வளவின் பின்பகுதியில், குலதெய்வமும் காவல் தெய்வமுமான வைரவரை நிலைநிறுத்தி, பக்தியுடன் வழிபட்டு வந்தது அவரின் முன்னோர்களின் பாரம்பரியமாகும். பின்னர், அவருடைய காலத்தில் அங்கு ஒரு மடப்பள்ளியும் கட்டப்பட்டது. ஒவ்வொரு புத்தாண்டிலும் விசேஷ பூஜைகள், வேண்டுதல் வழிபாடுகள், பொங்கல் சமர்ப்பித்தல், படையல் செய்தல் ஆகியவற்றை அவரது தாய் பக்தியுடன் தொடர்ந்து செய்து வந்தார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தந்தையைப் பிரிந்த பின்னரும் இந்த இல்லத்தை உறுதியுடன் நிலைநிறுத்தி, அனைத்து பொறுப்புகளையும் ஏற்று, பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தவர் அவர். முன்பின் அறிமுகமில்லாத தனத்தின் துணைவியார் திருமதி மகேஸ்வர் அவர்கள், என் கண்முன் முதன்முதலாக நின்ற அந்த நாளிலிருந்து இன்று வரை, அன்பிலும் அரவணைப்பிலும் எனக்கு ஒரு அருமை சகோதரியாகவே இருந்து வருகிறார். எனக்கு தனம் அவர்கள் எப்படியோ, அதேபோல மகேசன் அவர்களும் என் மனதில் மிகுந்த பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரியவராகத் திகழ்கிறார்.
Dear Mahes
As you may realise I treat you like my sister
I cannot believe that one year has elapsed since your devoted husband and my beloved brother passed away
The last conversation I had with Thanam is still fresh in my memory and is preserved until I depart this world
I take my hat off to you in the way you looked after Thanam when he was living and now living in his memory and performing everything in his name and performing all the things that he would have liked to be done
You have continued to be part of the Cumarasamy clan and conducted yourself admirably
I had lot of involvement with Thanam in his school days and at times would have been harsh on him
His achievements are numerous and commendable
He has left behind a wealth of heritage for you and for the clan
Needless to state he was a good husband brother and always family oriented
There is lot more I can speak about
Thanam
Thanam will be always remembered but sadly missed at family functions
His service to humanity is immense
His devotion to Hinduism is immeasurable
With these few word I would say thank you Thanam for the life you shared with me and my family
Your ever loving Eliyannan and family
My remembrance of Sinnasinanna (Sithamparapillai / Sitha / Thanam)
Sinnasinanna's last words to me "Sugamay Pooitu Vaa" - have a safe journey and back, still his last words ringing in my ears loud and clear, it's hard to believe that one year has gone since that dark day of 31st July 2025 but his memories are still afresh in my mind. In our childhood we were together everywhere we went, whatever we did, he had a special passion for social services and involvements with temples activities. These early experiences paved the way to be the man he was as an adult, a man loved by everyone for his character and the humanity services he did till the last breath. I learnt a lot from him about service to human and involvement in community activities, which I am trying to follow some of those. If I am credited with praise or any complements for doing it, it's due to his encouragements and teaching.
Sinnasinanna our Ammah's favourite son, he helped her from his young age with her small businesses she ran from home. He had the responsibilities to support Ammah financially and other ways till her death.
For a period Sinnasinanna and I lived with our eldest brother in Colombo. There was a shortage of bed to sleep, Sinnasinanna always offer his bed to me and he slept on the floor on a Matt, that much of care and love he had for me. He was my financial supporter.
Like other siblings in our family he went to the University and obtained a Batchelor degree in Law then entered the Law College and became an Attorney-at-Law. He received a scholarship from the U.K. Government to further his legal carrier. He became a prominent Lawer in U.K. and spent his last 40 years in U.K. serving his community, establishing many community-based institutions, providing legal advises to the many of the Hindu temple's boards, helping many refugees to become citizen of that country and many more. In recognition of his services, he received many awards from various institutions. He will be ever remembered as "Sitha / Sitha Anna for all the services he did to his community. He is a firm believer of "service to Human is service to God".
Even though he lived in U.K. for most part of his life he never forgot his home country and his village. He took a very keen interest till his death in the renovation work of our village temple "Puttalai Pillaiyar Temple". He acted as the coordinator for funds collection in U.K. and managed to collect multimillions of Rupees for the temple renovation works. He wanted to witness this Kumbhabisekam but his wish not fulfilled, Puttalai Pillaiyar had other ideas for him.
Your legacy and memories will cherish in my mind forever.
Your one and only younger brother Manian. (Palasubramaniam)
சட்டம் மட்டும் சாய்ந்தது ஏன்
பார் போற்றும் இலங்கை தன்னில்
புகழ்மிகு யாழ்ப்பாணமதில்
மார்தட்டித் தமிழ் வளர்க்கும்
மகிமைமிகு புலோலி தனில்
சீர் பூத்த வம்சமதில்
குமாரசுவாமி லட்சுமிப்பிள்ளை
ஊர்போற்றப் பெற்றெடுத்தார்
உயர்திரு சிதம்பரப்பிள்ளை.
உத்தமர்கள் உன்னோடு
பிறந்திட்ட சோதரர்கள்
சுத்தமான உள்ளமொடு
உடன்பிறந்தாள் சோதரியாள்
அத்தனை பேருடனும்
அன்புகாட்டி வாழ்ந்திட்ட
சித்தமதில் சுத்திகொண்டு
வாழ்ந்த சிதம்பரப்பிள்ளை.
சட்டத்துறையில் கல்வி கற்று
சாதனைகள் பல புரிந்து
பட்டம் பல பெற்றோங்கி
புகழ்மிக்க லண்டனதில்
அட்டமா சித்திகளை
அகத்துள்ளே உருவேற்றி
பெட்டகமாய்ப் பெருமைகளை
பூட்டிவைத்துக் காத்திட்டார்
மனம் கவர்ந்த மங்கையவள்
மகேஸ்வரியாம் திருமகளை
குணமுயர்ந்த கோமகனாய்
கண்டு நின்று கரம்பிடித்து
தினம் தினம் ஓர் புதுநாளாய்
அனுபவித்து அகமகிழ்ந்து
கணநேரம் பிரியாமல்
கட்டுண்டு வாழ்ந்திட்டார்.
தர்மங்கள் பல செய்தார்
தானங்கள் தந்து நின்றார்
பூர்வ புண்ய பலனதனால்
பித்ருக்கள் முக்தி பெற
ஆர்வமுடன் துணைவியுடன்
காசிசென்று திதி செய்தார்
கர்மவினைப் பயனதனால்
கடவுள்பதம் அடைந்திட்டார்.
இவருக்கினிப் பிறப்பில்லை
தொடர்ந்தேகும் துக்கமில்லை
நவதுவாரப் பிணியில்லை
இவர் புகழில் களங்கமில்லை
தவவாழ்க்கை வலிமையினால்
தவறிழைக்க வழியில்லை
சிவனடியில் எப்போதும்
மகிழ்ந்திருப்பார் ஐயமில்லை
பட்டமரம் துளிர்த்திடுமா
வானும் கீழே விழுந்திடுமோ
வட்டம் நீள்கோ டாயிடுமோ
வாணிதன் வார்த்தை பொய்த்திடுமோ
சுட்டபழம் பிஞ்சாயிடுமோ
சுவற்றில் தண்ணீர் நின்றிடுமோ
சட்டம் மட்டும் சாய்ந்தது ஏன்
சொல்வாய் லண்டன் ஸ்ரீ முருகா
ஆண்டொன்று ஆகிறதே
ஆறவில்லை எம்மனது
துாண்டுகின்றேநாம் நாட்களையெ
துளர்ந்த எம் உடலோடு
துர்ண்டுகின்றோம் உம் நினைவாய்
ஒளிவீசும் தீபமதை
வேண்டுகின்றோம் முருகைனை
திருவடியில் இளைப்பாற...
I heard about the demise of Siththa only today. My batch mate at the Law Faculty and my colleague at the Attorney Generals department. He proved to be a brilliant student and an efficient Lawyer ....