9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குகப்பிரியன் மகேந்திரராஜா
1983 -
2017
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குகப்பிரியன் மகேந்திரராஜா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல நண்பா...!
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக நண்பா!
கண் வைத்தானோ - அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்
விளையாடி ஆசை காட்டி - நீ
மறைந்து சென்ற மாயம் என்ன?
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து ..!
உன் பிரிவால் வாடித்துடிக்கும்
நண்பர்கள்...
தகவல்:
நண்பர்கள்
8 Years gone and still dearly missed