யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சரவணமுத்து அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், சோமசுந்தரம் சவிரிஆச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,
மரிஸ்ரெலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கிரிசாந்தன், பிரியாந்தன், பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மறீன்(லக்ஷி), பிரபாலினி ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், கனகசிங்கம் மற்றும் தையல்நாயகி(கனடா), பொன்னம்பலம், சரஸ்வதிதேவி, பத்மாதேவி, புஸ்பதேவி, விஸ்வநாதன், சுசீலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, கந்தலிங்கம், நேசம், பரமானந்தன், வேலாயுதபிள்ளை, நித்தியானந்தம், சந்திரா, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், யோசவ் அல்பேட் மற்றும் ரொபேட், றிச்சாட், யூலியற் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொணத்தன் பிரவீன், யஸ்ரின் பிரணவன், யொஸ்லீன் பூரணி ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
His kind face remains forever in our image. You retired quietly, the same way you live in the world of good and righteous. May God watch over you forever and ever.