முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் Hereford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிளிங்டன் சேர்ச்சில் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே கிளிங்டன் ...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
ஆறுதலாய் இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே!
எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!
ஆண்டுகள் பத்து ஆனதடா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்
உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியே
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோமே
காலங்கள் எத்தனை கடந்து போனாலும்
உன் பிரிவிலிருந்து மீண்டு வருவதற்கு
இந்த ஜென்மமல்ல எந்த ஜென்மமும் போதாதய்யா
என்றும் உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்