



பண்டத்தரிப்பு பிறைற்ரன் விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் நாட்டின் அசாதாரண நிலமையினால் புலம் பெயர்ந்தபின்னர் கனடாவிலே 1991ம் ஆண்டில் இருந்து இன்று வரையும் இயங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதுபண்டத்தரிப்பு மக்களை கோடை காலத்திலும் குளிர்காலத்திலும் ஒன்றிணைத்து பண்டத்தரிப்பில் உள்ள சில பொது விடயங்களை செய்து வருகின்றது. பண்டத்தரிப்பு மக்களை ஒன்றுகூட்டுவதற்கு முதற்காரணமாக இருந்தவர் அமரர் கிளைமென்ற் செல்வரட்ணம் அவர்கள் என்பது மிகையாகாது.அன்னார் இந்த ஒன்று கூடல் நடைபெறுவதற்கு எமக்கு ஆதரவு வழங்கி வந்தார் அது மட்டுமல்லாது எமது கழகம் வளர்வதற்கும் அன்று தொடக்கம் இன்று வரை பல உதவிகளையும் அறிவுரைகளையும் செய்துள்ளார். அன்பாகவும் நகைச்சுவையுணர்வோடும் எம்முடன் பழகியவர் இன்று எம்மைவிட்டு பிரிந்தது எமக்கு பேரிழப்பாகும். அன்னாரது நினைவுகள் எம்மை விட்டு என்றும் அகலாது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்போம். பிறைற்றன் விளையாட்டுக்கழகம்-கனடா 28/11/2020
