யாழ். இல.89, பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Les Lilas ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எட்னா ஜஸ்மின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அம்மா
அம்மா!
உங்கள் அழகிய வதனம் கண்டு
ஆண்டொன்று ஆனதுவோ
ஆறாத்துயரோடு நாமிங்கு
நாள்தோறும் வாடுகின்றோம்.
தேறுதல் தந்திடவே எம்மிடையே வந்திடுவீர்.
உடல்நோயும் உளநோவும்-இனிப்
போதுமென்று எண்ணித்தான்
ஆண்டவர் உமை அழைத்தாரோ,
அன்னாரின் பாதமதில் அமைதியாக உறங்கிடுவீர்.
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்...
எங்கள் தெய்வமே
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
கண்ணீர் சிந்த விட்டுச் சென்று
ஆண்டு ஒன்று ஆனதோ..?
ஈரைந்து மாதங்கள் எமை
சுமந்து மீட்டெடுத்தாய் பரிவோடு
பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்த
எம் தாயே.! உங்களை இனி
எங்கே காண்போம் அம்மா..!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
It’s terrible to hear about your loss and I express my sincere sympathy to you and your family