10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிறிஸ்சோஸ்ரொம் அன்ரன் யோசவ்
இறப்பு
- 22 FEB 2015
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அச்சுக்கூட வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்சோஸ்ரொம் அன்ரன் யோசவ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு பத்தாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை
ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால் எம்மை
நாடறிய வைத்தீர்கள்
ஆண்டுகள் பத்து கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
அன்பால் என்றும் எத்தனை மாதம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்