
நாவற்குளி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மகேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள்
அன்பு அம்மா
பத்து
ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா
என்ன
செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத
விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாருங்கள்
அம்மா
உங்கள் முகம் காண!
உங்கள் புன்சிரிப்பும்
பாசம்
நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு பொழுதும்
ஏங்க வைக்கின்றது அம்மா!
எங்களுக்கான இலக்கணம்
படைத்த
உங்களை பத்து
அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும்
மறக்கமாட்டோம்...
இப்பூமியில் - நீங்கள் இல்லை
என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு
முகத்தை இனி நாங்கள்
என்று காண்போம்?
அம்மா!
என்று நாங்கள்
யாரை அழைப்போம்?
காலத்தால் எம்மைப்
பிரிந்து
கண்களில்
நீர் மல்க வைத்து
நாம்
இங்கே தவித்து நிற்க எம்மை
விட்டுப் போனதெங்கே?
ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள்
பல சென்றாலும்
ஆறாது
ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...