

யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லத்துரை அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பன்னாலையைச் சேர்ந்த சின்னத்தம்பி சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரத்தினம் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி(ஆசிரியை, உப அதிபர்- தாவடி தமிழ்க்கலவன் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன்ராஜ், உஷாராணி, சோதிராஜ், யசோராணி, நிமலராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவந்தி, காலஞ்சென்ற கிருபாகரன், ஜெயகலா, சிவராமேஸ்வரன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், செல்வநாயகி, மகேந்திரன் மற்றும் செல்வநாயகம்(செல்வம்ஸ் பற்றி உரிமையாளர்), செல்வராணி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவபாக்கியம், பஞ்சலிங்கம், சொர்ணலிங்கம் மற்றும் செல்லமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா, தர்சன், அபிராமி, தரன், ரிஷி, கேசிகன், யசிகன், அரசன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2020 திங்கள்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tearful memories and our deepest sympathies- Sanjaiyan, Rumya and Ananya Nithiananthan