யாழ். தென்புலோலி உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், உபயதிர்காமம், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா விக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பாறுபதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலசுப்பிரமணியம், பத்மலோசினி, இன்பநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூங்கோதை, யோகரஞ்சன், டினோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பதுமநாயகம், புவனேஸ்வரி(ஆசிரியை), பகவதி, அம்பிகை பாகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தனலட்சுமி, விமலாதேவி, கமலாதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியங்கா, கீதாஞ்சலி, சோம்ஈஷ்வர், இனேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகளின் பின்னர் மதியம் அளவில் நல்லடக்கத்துக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.