Clicky

நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 04 DEC 1939
இறப்பு 27 SEP 2023
அமரர் செல்லத்துரை சத்தியமூர்த்தி (மாஸ்டர்)
அதிபர், மீனாட்சி வர்த்தகக்கல்லூரி, கொட்டடி , யாழ்ப்பாணம் - யாழ்- கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் - நல்லை ஆதீன முன்னாள் மேலாளர்
வயது 83
அமரர் செல்லத்துரை சத்தியமூர்த்தி 1939 - 2023 கொட்டடி, Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா மதுரை, கோண்டாவில், புத்தளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சத்தியமூர்த்தி அவர்களின் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி உணர்வோடு
உணர்வாகி உயிரோடு உயிராகி கலந்த
எம் அப்பாவே! தாத்தாவே! மாமாவே!

பலமானகாற்றைப்போல உன்மரணமும்
எங்கள்குடும்பத்தை துண்டு துண்டாகஉடைத்தது
ஆணிவேராய் எம்மை காத்து நின்ற எங்கள்தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
 வெகுநாட்கள் ஆனாலும் ஆறவில்லை
எம்மனம் விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும்மாறாது
என்றென்றும் உங்கள்நினைவு
எங்கள் உள்ளங்களில் அணையாததீபமாக சுடர்விடும்.

 அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், Whatsapp, Viber, Ripbook, ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உணவு அளித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் நினைவஞ்சலி 04-11-2023 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை நடைபெறவுள்ளது. அவரது ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Address:
Sri Sathya Sai Baba Centre
5321 Finch Avenue East
Scarborough, ON M1S 5W2

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 32 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்