யாழ். பளை அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பளை பேராலையை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா திசைவீரசிங்கம் அவர்கள் 15-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வமணி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜானி(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகமுத்து, செல்லம்மா(சுவிஸ்), நாச்சிமுத்து(இலங்கை), காலஞ்சென்ற பொன்னையா, தம்பிராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான கயிலாயபிள்ளை, சுப்பிரமணியம், யோகலட்சிமி, தங்கராசா மற்றும் யோகநாதன்(இத்தாலி), புனிதவதி(சுவிஸ்), கிருஸ்ணவேணி(சுவிஸ்), புஸ்பஞானதேவி(லண்டன்), உதயதேவி(சுவிஸ்), செல்வறூபி(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலமணி(இத்தாலி), காலஞ்சென்ற பத்மநாதன், திலகவதி(இத்தாலி), தவராசா(சுவிஸ்), நாகராசா(சுவிஸ்), ஜெயபாலசிங்கம்(லண்டன்), குணறஞ்சன்(சுவிஸ்), ஈஸ்வரன்(இத்தாலி), சின்னம்மா, காலஞ்சென்ற இராசம்மா, தெய்வானைபிள்ளை, அன்னலட்சுமி, செல்லம்மா, அன்னமுத்து, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(சின்னப்பு), கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
MAY YOUR SOUL RIP . FROM SIVA,COLLIERSWOOD