சுவிஸ் Zürich ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சார்லஸ் றோய் புஸ்பநந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
"இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை
விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" -யோவான் 11
"இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே.
அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன்
அவரோடேகூடக்
கொண்டுவருவார்" -தெசலோனிக்கேயர் 4
"நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம்,
நாம் மரித்தாலும்
கர்த்தருக்கென்று மரிக்கிறோம்,
ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்"-ரோமர் 14
கண்களை இமை காப்பது போல
நாம் காத்து வந்த
எம்
செல்ல மகனே!
வையகத்தில் நீ
வளமோடு வாழ்வாய்
என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட
கனா ஏராளம் அத்தனையும் நீ
கனவாக்கி எங்கு சென்றாய்!
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்தவைகள்
நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ?
அன்பான உன் உள்ளமதில்
ஆசை மொழி வார்த்தை
இவையெல்லாம் நாம் இழந்து
தவிக்கின்றோம் நினைக்கின்ற
வேளையில் நெஞ்சம்
வெடித்து தவிக்கின்றோம்
1 தெசலோனிக்கேயர் 5:28 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.