Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 22 APR 1983
இறப்பு 19 JUL 2007
அமரர் சந்திரலிங்கராசா பிறேம்நாத், பாலசந்திரன் பிரசாத்
வயது 24
அமரர் சந்திரலிங்கராசா பிறேம்நாத், பாலசந்திரன் பிரசாத் 1983 - 2007 மருதங்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வடமராட்சி மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Mendrisio வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரலிங்கராசா பிறேம்நாத் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலையில் கதிரவன் கண்விழிக்க
காத்திருந்த காலனவன்
உன் உயிர் கவர
சாவு என்ற சதிகாரர் விரித்த
வலையினிலே எங்கள் சந்தோசம்
அனைத்தும் சமாதி ஆனது மகனே
நீ எம்மை விட்டுப்பிரிந்த
அந்தக்கொடிய நாளை மறக்க முடியுமா?

காலம் காலமாய் ஒன்றாய் வாழ்வோம்
என்றெண்ணி கூட்டுப் பறவைகளாய்
சிறகடித்துப் பறக்கையிலே
மாயவனின் சதி எனும் மாயவலையில்
உமது உயிர் பறிக்கப்பட்டது ஏனோ?

நீ இல்லையெனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யா கண்களில்
திரண்டிடும் நீர் கரைத்திடுமோ காயத்தை
நீங்காத உன் நினைவுகள் எமை வந்து வாட்டுது
கண் நிறைந்த உனது தோற்றம்
கனவில் வந்து வருத்துகிறதே இன்முகம் காட்டி
எம் இல்லம் சுற்றிய நாட்களை
எப்படி மறப்போமடா!

அருகினிலே இனிமையாய் நிஜமாய்
கண் உன் உருவத்தை
நிழற்படமாய் பார்க்கும்போது நெஞ்சம்
விம்மி அழுகின்றதே மகனே
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
பலநூறு உறவுகள் இருந்தென்ன

நீ பிரித்த இடைவெளியை மகனே
யார்தான் நிரப்புவாரோ
கடலின் ஆழத்தை கூடக் கண்டு விடலாம்- ஆனால்
நாம் உன்மேல் கொண்ட அன்பினை
அளந்திட முடியுமா?

காலங்கள் பல கடந்தும் கண்ணீருடன்
கண்கள் உன் நினைவுடன்.
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்- எங்கள்
உள்ளங்களில் நீங்காமல் நிறைந்திருப்பாய் மகனே
நீ மறைந்த நாள் முதலாய் நினைவிழந்து வாழும் 
உனது உறவுகளின் கண்ணீர்த்துளிகள்.

அன்பின் உருவமாய்
குடும்பத்தின் இளைய மகனாய்
பாசமிகு தம்பியாய்
உறவினரின் பாசமலராய்
ஊரார் போற்றும் நல்மகனாய்
வாழ்ந்திட்ட நீ எமை விட்டு எங்கே போனாய்?

என்றும் உன் நினைவுகளோடு நாம்
உனது  ஆத்மா சாந்தியடைய வேண்டும்
சாந்தி...சாந்தி....சாந்தி.....!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices