

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், சுதந்திரபுரம் மத்தியை வதிவிடமாகவும் கொண்ட எட்வேட் சந்திரசேகரன் ரெஜினா அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும்,
எட்வேட் சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யோசப் கீதபொன்கலன், இம்மானுவேல், ஆனாபுஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மேரி, சந்திரதீபன்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரதாபன் சந்திரபாணு(இலங்கை), மாவீரர்களான சந்திரகாந்தன்(இளம்புலி), சந்திரவிந்தன்(ஈகைநம்பி), சந்திரயாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும்,
யூலியட் றாஜினி, அலோசியஸ், மைதிலி, சுகந்தன் ஆகியோரின் மாமியாரும்,
ஏஞ்சலின் டக்ஸிகா, எட்வின் பிருந்தன் மரியடிசோன், மரின் டிசோனிக்கா, மைந்தன், சாரங்கா, சாரங்கன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-07-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் சுதந்திரபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சுதந்திரபுரம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94775931045
- Mobile : +94764062365
- Mobile : +94778565960
- Mobile : +33767473850
- Mobile : +33783842665