மரண அறிவித்தல்
மலர்வு 25 MAR 1967
உதிர்வு 10 AUG 2022
திரு சந்திரசேகரம்பிள்ளை மனோகரன் (மனோ)
வயது 55
திரு சந்திரசேகரம்பிள்ளை மனோகரன் 1967 - 2022 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை மனோகரன் அவர்கள் 10-08-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகலிங்கம் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

குணாளன், கெளஷிகன், லக்‌ஷிகா ஆகியோரின் அன்பு தந்தையும்,

கமலராணி, ரஞ்சினிதேவி, சிவகுமார், மகாலக்‌ஷ்மி, கிருஷ்ணரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிஸ்கந்தராஜா, காலஞ்சென்ற யோகேஷ்வரன், சுமித்ரா, யோகேஷ்வரன்(பழனி), மோஜிதா, சஜித்தா, ஹரிசன் ஆகியோரின் மைத்துனரும்,

பிரதீபா, துஷ்யந்தன், துஷ்மிலன், பிரவீன், சுபாங்கி, சுஜன் ஆகியோரின் அன்பு பெரிய மாமாவும்,

ராகுல், அக்‌ஷத், அக்‌ஷரா, கிருஷா, மிக்‌ஷா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமார் - சகோதரர்
துஷ்யந்தன் - மருமகன்

Photos

Notices