

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமணிதேவி முத்துலிங்கம் அவர்கள் 04-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா(இணுவில் பரிகாரியார், பிரபல சித்தவைத்தியர்) தங்கம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான இணுவில் சின்னையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம்(ஓய்வு பெற்ற கமநல சேவைத் திணைக்களப் பிராந்தியப் பணிப்பாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தட்சணாமூர்த்தி(நோர்வே) அவர்களின் அன்புச் சகோதரியும்,
கமலாம்பிகை(நோர்வே) அவர்களின் அன்பு மைத்துனியும்,
நிறைஞ்சனா சுரேஸ்குமார்(நடன ஆசிரியர், இலண்டன்), விஜயராகவன்(கணக்காளர், இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
க. சுரேஸ்குமார்(கணக்காளர்-இலண்டன்), Dr வி. சஜிதா(இலண்டன்). கிருபாலினி(நோர்வே), ஜனனி(நோர்வே), சயந்தினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராகவீணா(இலண்டன்), கைலாஷ்(இலண்டன்), அவினாஷ்(இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
தெல்லிப்பழை அரசினர் வைத்தியசாலை முன் ஒழுங்கை,
தெல்லிப்பழை.