யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு உருத்திரன் அவர்கள் 09-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தர்மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு, இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நடராசா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அசலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
மதுரேசன், அனந்தன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
சங்கீதா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுபத்திரா தேவி, வசந்தா தேவி, காலஞ்சென்றவர்களான இந்திரன், சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வரதராஜா, கதிர்காம நாதன், ஜெகதாம்பிகை, சத்திவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமாரநாயகம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு சம்மந்தியும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ஆரணா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 10:000 மணியளவில் கல்கிசை மகிந்தா மலர்ச்சாலையில் நடை பெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் மிகவும் குறைந்த அளவு எண்ணிக்கையான குடும்ப உறவுகளுடன் இடம்பெற இருப்பதால் தயவு செய்து உங்கள் வருகையைத் தவிர்த்துக் கொண்டு உங்கள் அனுதாபங்களைத் தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலையத்தளங்கள் ஊடாகவோ பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.