5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரவேதிகா ஞானசீலன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உனைப் பிரிந்து இன்றோடு ஆண்டுகள் ஐந்து
ஆகிவிட்டது ஆனாலும்
உன் முகம் மறக்க ஒருபோதும்
எம்மால் முடியவில்லை
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை
நீ இல்லா இவ்வுலகில்
நிம்மதியோ எமக்கில்லை- ஆனாலும்
உன் நினைவுகள் என்றும் எம்முடன் நிரந்தரம் தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
why she died so early