




ஐயா எங்கள் சாமி. ஓய்வு பெற்றபின்பும் ஒய்வு எடுக்காமல் உயிர் போகும்போதும் ஓடியபடி இருந்த உங்கள் புனிதமான பாதங்களை வணங்குகின்றோம். எத்தனை ஏழைப்பிள்ளைகளிற்கு இன்றுவரை உங்களால் முடிந்ததைச் செய்தீர்கள். ஊரார் குழந்தைகள் எல்லோரையும் ஊட்ட வளர்த்தீர்கள். தெருவில் போகும் கட்டாக்காலி நாய் வந்து வாசலில் நின்றால் கூட அதற்குப் பசிக்குமே எனச்சோறுபோடும் பரோபகாரி. தனக்கில்லாவிட்டாலும் பிறருக்கு கொடுக்கும் பெரும்மனது. இனி ஒரு ஆத்மா இப்படிப் பிறந்து வர முடியுமா? சாமி எஞ்சாமி உமை இழந்து கைபிசைந்து நிற்கின்றோம். எங்கள் பிள்ளைகள் உங்கள் கோவிலில் வந்துதானே சமயத்தை ஆன்மீகத்தை அறிந்தார்கள். எல்லோருக்கும் ஆசானாய் வழிகாட்டிய எஞ்சாமி விண்ணகம் சென்றதோ !!! ஓயாமல் அழுது கண்ணீரைக் காணிக்கையாக்குகின்றோம். சிவமோட்சம் உங்களிற்கு கிடைக்க பெருமாளை வேண்டுகின்றோம். சாமியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.