Clicky

கண்ணீர் அஞ்சலி
பிறப்பு 02 MAY 1939
இறப்பு 01 SEP 2021
திருமதி புவனேஸ்வரி துரைசாமி 1939 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அம்மாவின் நினைவாக

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய் நினைவிருக்கிறது
நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையம்மா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது
எந்த உருவத்தில் நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன் அவன்
என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய் அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பதுளை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி துரைசாமி அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி துரைசாமி(பிரபல வர்த்தகர்- Doraisons, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவிகரன் மற்றும் முரளிகரன்(கொழும்பு), சுதாகரன்(கனடா), ஜெயகௌரி(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீகரன்(கனடா), ஜெயரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), நாகேஸ்வரி(கனடா), திருக்கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம் கனகசபை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, செல்லம்மா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், திருநாவுக்கரசு, மாணிக்கம் மற்றும் கமலாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராகுலன்(இங்கிலாந்து), பிரசாத்(கனடா) ஆகியோரின் அப்பம்மாவும்,

சயந்தன்(ஐக்கிய அமெரிக்கா), திவாகர்(ஐக்கிய அமெரிக்கா), கேசினி(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீராம்(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Due Country's situation and lock-down, we have Private Funeral today (02-09-2021) in Colombo.

தகவல்: முரளிகரன் - மகன்

தொடர்புகளுக்கு

முரளிகரன் - மகன்
சுதாகரன் - மகன்
ஜெயகெளரி - மகள்
ஸ்ரீகரன் - மகன்
ஜெயரஞ்சினி - மகள்