10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பூபாலப்பிள்ளை நவரெத்தினம்
ஓய்வுபெற்ற முகவர்- இ. போ. சபை, சமாதான நீதவான்
வயது 70
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், முனைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலப்பிள்ளை நவரெத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்