
கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெனடிக் செறின் தர்சினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-04-2025
நீ விட்டுச்சென்ற
அழகான
ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக்
கலைந்து போகாது
நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது
நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி
வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும்
வரை
வற்றிப் போகாது
ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!
உன் கரம்பிடித்து நடந்த நாட்கள்
நீ தாலாட்டுப்பாடி உறங்கிய நாட்கள்
அமுதூட்டிய உன் அன்புக்கரங்கள்
இதயத்தின் ஆழத்தில் புதைந்த
வேர்களாய்
நித்தம் நித்தம்
அலை மோதுதம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..