Clicky

பிறப்பு 17 JAN 1950
இறப்பு 08 SEP 2020
அமரர் பெனடிக்ட் அன்டன் தர்மபாலன்
இளைப்பாறிய விலைமதிப்பீட்டாளர், விலைமதிப்பீட்டு திணைக்களம், Construction Consultant- Florida Real Estate private Ltd
வயது 70
அமரர் பெனடிக்ட் அன்டன் தர்மபாலன் 1950 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Benedict Anton Tharmapalan
1950 - 2020

1 / 1 அன்பின் இனிய மைத்துனர் தர்மபாலன், நியூசிலாந்து நாட்டில் இருந்து உமது தாய் மாமன் சுப்பிரமணியம் மூத்தமகன் ரவி மிகுந்த அளவிடமுடியாத கவலையில் எழுதிய துயர் மடல், எனக்கு நெருங்கிய வயது மைத்துனர் அத்துடன் யாழ் அன்று நான், நீர், அப்பா உள்ளபோது நாம் வாழ்ந்த வாழ்க்கை இன்று மனதில் அழியாது உள்ளது அந்த காலம் இன்று சுகபோக நாட்டில் வாழ்த்தாலும் இல்லை நாட்டில் கொடிய யுத்தத்தின் கொடுமைகள் அத்தை மாமா மைத்துனர் குடும்பம் இனிய உறவுகளை சூறையாடி விட்டது இன்றைய நடைமுறையில் அதை இனி அடைய முடியாது அதுதான் வாழ்க்கை, நான் , நீர் ,அதை அனுபவித்தோம் உலகில் இப்படி சிதறுண்டு பின் சேர சில வழியாக இருந்த வேளையில் இந்த கொடிய கொறோனா வந்து இன்று நாளை முடிவு தெரியாது இருக்கும் போது உமது பிரிவு தவிப்பு மடல் எழுத வைத்தது துயரமாக இருக்கிறது நான் நீர் இளமை வயதில் கொழும்பில் கமலம் அத்தை வீட்டில் இருந்த வேளையில் சுற்றிய இடங்கள் அடைந்த சந்தோஷம் அத்தனையும் கண் முன்னே வந்து கண்ணீர் வரவைக்கிறது எல்லா தொலைந்தது இறைவன் உலகில் துன்பம் மட்டும் பார்க்க வேண்டும் எல்லோரும் என நினைக்க வைத்து உம்மை அவசரமாக அழைத்தமைக்கு காரணம் இதுதான், இன்று நான் மைத்துனர், நண்பர், நல்ல மனிதர் இழந்தேன் அத்துன்பம் உமது ஆத்மா சாத்தி அடையும் என இறைவனை வணங்குவதை தவிர வேறு வழி இல்லை,ஆனாலும் என் நினைவுகள் உள்ள வரை உமது நினைவு அழியாது ,உமது ஆசை சகோதரிகள் எப்படி தாங்குவார்கள் இந்த துன்பத்தை , துயரால் வருந்தும் மைத்துனர் சுப்பிரமணியம் ரவி.

Write Tribute