15ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் தண்ணீர் தாங்கிவீதி குருநகரைப் பிறப்பிமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெனடிற் லீயோ அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதினைந்து வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே என்
மனசு அழுவதை நீங்கள்
உணர்வீர்கள் உணர்ந்து
கொண்டேயிருப்பீர்கள் அப்பா!
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர்விடும்
ஒளியாய் மலர்கின்றன
சிந்தை குளிர சிரிப்பொலி
ஒலிக்கும் அன்பு வதனம் எங்கே?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
பதினைந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்