Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JAN 1944
இறப்பு 14 JUL 2021
அமரர் பியற்றீஸ் ஞானமணி மனோகரன்
B.A University of Peradeniya, Retired Accountant- Irrigation Department Batticaloa
வயது 77
அமரர் பியற்றீஸ் ஞானமணி மனோகரன் 1944 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பியற்றீஸ் ஞானமணி மனோகரன் அவர்கள் 14-07-2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறுதல் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதன் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மேரி ஆஞ்சலா ஜீவரட்ணம், மேரி திரேஸ் மற்றும் ஜெயரட்ணநாதன், ஜெயபத்மநாதன், மேசி ராஜேஸ்வரி ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஞானஜோதி மற்றும் மகேந்திரன், குலேந்திரன், நகுலேந்திரன், வசந்தகுமாரி, காலஞ்சென்ற சாந்தகுமாரி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நிவோஷலா- மகள்

தொடர்புகளுக்கு

மனோகரன் - கணவர்
இந்திரா - மருமகள்
மனோஜ் - மகன்
டிலோ - மகள்

Photos

Notices