Clicky

பிறப்பு 17 JUN 1957
இறப்பு 11 DEC 2019
அமரர் பவானி இராசரத்தினம்
வயது 62
அமரர் பவானி இராசரத்தினம் 1957 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தங்கவேலு குடும்பம் 14 DEC 2019 Canada

இறப்பு ஒருவன் அல்லது ஒருத்தி தன் வாழ்க்கையில் அடையும் கடைசித் தோல்வி! இந்த உலகம் புதுமையானது. அதைவிட மானிட இறப்பும் பிறப்பும் அதைவிட புதுமையானது. எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம்? ஒன்றுமே தெரியாது. சாவு எங்கள் வீட்டுக் கதவைத் தட்டுமட்டும் நாம் சாவைப்பற்றி யோசிப்பதில்லை. கொடிது கொடிது இளமையில் வறுமை என ஔவையார் பாடினார். அதனிலும் கொடுமை இளைமையில் சாவு. இந்த உலகில் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய சகோதரி பவானி தனது வாழ்க்கையை இளமையில் முடித்துக் கொண்டார். அந்தக் காலத்தில் 62 வயது முதுமைக்கு அடையாளமாக இருந்தது. இன்று 62 வயது முதுமைக்கு அடையாளமாக பார்க்கப்படுவதில்லை. சகோதரி பவானி சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் வருந்தினார். பின்னர் உடல் நலம் தேறி நல்ல படியாக இருந்தார். சகோதரி பவானியிடம் எனக்குப் பிடித்தது அவரது மந்தகாசச் சிரிப்பு. கண்டதும் அழகாகச் சிரிப்பார். வஞ்சகம் இல்லாது புன்னகைப்பார். நெஞ்சார நலம் விசாரிப்பார். தம்பி இராசரத்தினத்துக்கு பவானி போன்ற ஒரு மனைவி வாய்த்திருந்தது பெரிய கொடை. அவரது வீட்டுக்கு வரும் விருந்தினர்களை முகம் கோணாது வரவேற்று உபசரித்தார். ஒரு நாள் இரு நாள் இல்லை. வாரக் கணக்கில். தம்பி இராசரத்தினம் மேற்கொண்ட எல்லா முயற்சிகளுக்கும் பவானி கைகொடுத்தார். ஆண்பாதி பெண்பாதி என்பார்களே அந்தச் சொற்றொடர் இந்த இணையர்களுக்குப் பொருந்தும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார் கவிஞர் கண்ணதாசன். ஒருவனுக்கு ஒரு நல்ல மனைவி வாழ்க்கையில் வாய்த்துவிட்டால் அவனுக்கு வேறு எந்த வரமும் தேவையில்லை என்பார் வள்ளுவர். சிறந்த குணமுடைய மனைவியே ஒருவனுக்கு செல்வம் ஆவாள். இவை முக்காலும் உண்மை. உலக வாழ்க்கையில் இன்பம் துன்பம் நல்லது கெட்டது, பிறப்பு இறப்பு இயற்கை. சாதல் புதுவதல்ல என்கிறார் சங்கப் புலவர் பூங்குன்றனார். மறிப மறியும் மலிர்ப மலிரும் பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும் அறிவது அறிவார் அழுங்கார் உவவார் உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று (மறிப மறியும் = நடப்பது நடந்தே தீரும்; மலிர்ப மலிரும் = நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும்; பெறுப பெறும் = நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்) தம்பி இராசரத்தினத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. நக்கீரன் கனடா 14-12-2019

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 12 Dec, 2019
நன்றி நவிலல் Sat, 11 Jan, 2020