இறப்பின் போதும் அடையாளம் காணப்படுகின்ற சிறப்பினைப் பெற்ற பெரும் பேறு இவள் தங்கை, அக்காள், மைத்துனி, தாய் எந்தத் தகுதியும் இவருக்கு இன்னமும் பொருந்தும். எனக்கு ஒரு அக்காள்... முக்கியதொரு பொழுதின் போது முன்னுரைத்த ஒரு அக்காள்... காலங் கடந்தும் கனிவாக இருக்கின்ற அவர் அறிவுரைகள் ஞாலமும் நிலைக்கும் இன்னொரு சிறப்புண்டு இந்த அன்னப்பறவைக்கு... தனது துணைக்கு இவர் துணையல்ல.. இவர் தான் தூண்.. இவரால் உயர்ந்தது இவரது துணை எந்த எதிர்ப்புக்களையும் தாண்டி தன் துணையை தூக்கி நிறுத்திய ஒரு தூய புண்ணியவதி மாவீரம் மதித்தவள், அதற்காக தனது குடும்பத்தையே ஆகுதித் தீ ஆற்றில் இறக்கியவள்... துணிவிற்கு மறு பெயர் பாவானி துணைக்கான தூணிற்கும் மறு பெயர் பவானி.. கற்றுக் கொள்ள நிறையவுள்ள ஒரு பொற்குடம் போகிறது... வாழ்த்துவோம் வணங்குவோம்...
Our heartfelt condolences to you and your family at this difficult time. May her soul Rest In Peace.