Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 DEC 1946
இறப்பு 25 DEC 2019
அமரர் பவானி மருதவாணர் 1946 - 2019 வழக்கம்பரை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வழக்கம்பரையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, நல்லூரடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவானி மருதவாணர் அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.

அன்னார், வழக்கம்பரையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் பவளமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தையா மருதவாணர்(முன்னாள் இணைப்பாளர்- யாழ் அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரோகினி(ஆசிரியை- சண்முகா வித்தியாலயம், திருகோணமலை), நந்தினி(கனடா), ரமணன்(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கவீந்திரன்(ஹபரணை), யோகராணி(வட்டுக்கோட்டை), சேகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகணேசன்(இல. மின்சாரசபை), தர்மராஜா(கனடா), சிந்து(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரேஷ், ஹரிகேஷ், ஆரன், அக்‌ஷயன், அஞ்சனா, யாதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல.40, சாமாதி ஒழுங்கை, திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்