1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Marl ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் உஷா அருள்மேரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்
"(லூக்கா 23:43)
உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்
அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
ஓராண்டும் கடந்ததம்மா
ஒருயுகம் போல் உள்ளதம்மா
நனவுபோல் இல்லையம்மா
கனவுபோல் இருக்குதம்மா !
வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்