யாழ். அல்வாய் தெற்கு அண்ணா இல்லத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Trondheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் தமிழ்மலர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் பாசமலர் எம்மைவிட்டுப் பிரிந்து 31 நாட்கள் ஆகிவிட்டது,
எத்தனை நாட்கள் சென்றாலும் அழியாது
நீங்கள் தந்துவிட்டுச் சென்ற நினைவுகள்
உங்கள் பிரிவால் நீண்ட பெரும் சோகத்தை நித்தம் அனுபவிக்கிறோம்
நீங்கள் திரும்பி வரமாடீர்கள் என்ற உண்மை தெரிந்தும்
மனம் ஏங்குகிறது உங்களைக் காண
உங்கள் உடல் மட்டும்தான் எங்களை விட்டு பிரிந்தது
ஆனால் நீங்கள் தந்துவிட்டுப் போன நினைவுகள்
எண்ணங்கள் எல்லாம் எம்முடனே வாழ்கின்றது
உங்கள் பிரிவால் நாங்கள் இங்கு கதறுகிறோம்
மீண்டும் ஒருதரம் வந்து எங்களுடன் வாழ்ந்திடமாட்டாயா என்று.
என்றும் உங்கள் நினைவுகள் சுமந்து வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தியடைய அல்வாய் மண்ணின்
காவல் தெய்வங்களன குமுழடி பிள்ளையாரையும்,
அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மனையும் வேண்டிநிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.