10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாமினி கோடீஸ்வரன்
விண்ணில்
- 18 JUN 2011
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும், தற்போது Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாமினி கோடீஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
முகத்தைக் காணும் முன்பே
நேசிக்கத் தெரிந்தவளே
துன்பம் துயரம் அறியாது
எமை அன்போடு வளர்த்தவளே
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
அன்பிற்கு இலக்கணமாய்
இருந்த எம் குலவிளக்கே
பத்து மாதம் பாடுபட்டு பத்தியங்கள்
பல காத்து பத்திரமாய் எமைப்
பெற்றெடுத்தவளே
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே
இவ்வுலகில்
ஆண்டு பத்து கடந்தாலும் உன் நினைவது
எமை விட்டு அகலாமல் என்றும்
உனது நினைவைச் சுமர்ந்தவர்களாய்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திகின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்
I missed you for ever and I love you for ever in my Whole Life kodeeswaran .P