Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 AUG 1941
இறப்பு 07 FEB 2022
அமரர் பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம்
வயது 80
அமரர் பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் 1941 - 2022 Klang, Malaysia Malaysia
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா klang ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் அவர்கள் 07-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற தமோதரம்பிள்ளை, லட்சுமி, சரஸ்வதி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, இரத்தினேஸ்வரி, சிவசுப்பிரமணியம், சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாபரன், திருமாறன், மணிமேகலை, காலஞ்சென்ற அரவிந்தன், கலைவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகந்தினி, மதிவதனி, பாலசுப்பிரமணியம், நந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜய், ஜனனி, சரண்யா, அரவிந், தர்சிகா, அனித்தா, சுகன்யா, சஞ்சய் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தயாபரன் - மகன்
திருமாறன் - மகன்

Summary

Photos

No Photos

Notices